என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளைஞர் திறன் போட்டி"
- இலவச உணவு தங்குமிடம் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.
- கடனுதவி வழங்க மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
காங்கயம்:
காங்கயம், தாராபுரம் சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். காங்கயம் நகர்மன்றத் தலைவர்சூ ரியபிரகாஷ் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில் பல்வேறு துறைகள் மூலம் 16 பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த 275 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சிக்கு தேர்வு செய்தனர்.
இவர்களுக்கு இலவச உணவு தங்குமிடம் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சுய தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க மாவட்ட தொழில் மையம் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது. விழாவில் திட்ட இயக்குனர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானசேகரன், சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் கே.கே.துரைசாமி, துணைத்தலைவர் டி.சண்முகம்,தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.